Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கடந்த மாதம் 138 படையினர் பலி- 549 பேர் காயம்: சிறிலங்காப் பிரதமர்
Date&Written by: (05.06.2008- Guruparan)

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சுமார் ஒரு மாத காலப்பகுதியில் 138 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 549 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை, இன்று பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. இந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பதா அல்லது அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து விலகிக்கொள்வதா என்பதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

அனைத்துலக ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும் ஊடகச் சுதந்திரம் இல்லை என்றும் கூறி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை திசை திருப்ப முனைகின்றனர்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போருக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து துரோகத்தனத்திற்கு துணைபோக வேண்டாம். கடந்த ஏப்ரல் 30 ஆம் நாள் ஜூன் 2 ஆம் நாள் வரை 138 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 549 படையினர் காயமடைந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் 63 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.