Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவின் தலைநகரில் 42 தமிழர்கள் கைது
Date&Written by: (05.06.2008- Guruparan)

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெகிவளை தொடருந்து பாதையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பினை அடுத்து அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நடத்திய தேடுதலில் இதுவரை 42 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இத்தேடுதல் நடத்தப்பட்டது.

தெகிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களிலேயே இத்தேடுதல்கள் தீவிரமாக நடைபெற்றன.

தொடர்ந்தும் சில இடங்களில் தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. தேடுதலின் போது தமிழர்களின் அடையாள அட்டைகள் என்றால் அதனை துருவித்துருவி பார்த்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தேடுதல்களுக்காக மேலதிக அதிரடிப்படையினர் மேற்படி இடங்களில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.