Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Date&Written by: (05.06.2008- Guruparan)

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை "தேசத்துரோகி" என்று தெரிவித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றம் நோக்கி ரணில் விக்கிரமசிங்க சென்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அங்கு பெரும் அமளி-துமளி ஏற்பட்டது.

அரசாங்கத்தின் அடாவடி அமைச்சர் என்று பெயர் எடுத்த மேர்வின் சில்வாவின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெளியிடங்களில் இருந்து குண்டர்களும் அரசாங்க ஆதரவாளர்களும் பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.

காலை 8:45 மணியளவில் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனம் நாடாளுமன்ற சந்திப்பகுதியை அண்மித்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை திடீரெனப் பாய்ந்து வழிமறித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன.

இழுபறிகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்து பயணத்தை தொடர்வதற்கு அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உதவினர்.

எனினும் நாடாளுமன்ற சுற்று வட்டப் பகுதியை ரணில் விக்கிரமசிங்கவின் வாகனம் அண்மித்ததும் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பெரும் இழுபறி நிலவியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கைகளில் ரணில் விக்கிரமசிங்கவினதும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும், முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவினதும் உருவப் பொம்மைகளை ஏந்தியிருந்தவாறு ரணிலை தேசத்துரோகி என்று கூச்சலிட்டனர். அவை பின்னர் எரியூட்டப்பட்டன.

சிறிலங்காவிற்கான ஜி.பி.எஸ். சலுகை நீக்கப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட சுற்றுப்பயணமே காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது சம்பவ இடத்திற்கு பெருமளவான படையினரும் காவல்துறையினரும் வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் வரை அழைத்துச் சென்றனர்.

நாடாளுமன்றம் சென்ற ரணில், இச்சம்பவம் குறித்து விபரித்ததுடன் தனது சிறப்புரிமையை மீறும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் லொக்கு பண்டாரவிடம் வலியுறுத்தியுள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.