Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர்கள் மீது படையினர் தாக்குதல்
Date&Written by: (05.06.2008- Geetha)

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூண்டில் படகுகளை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதலினை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலினால் படகில் இருந்து கடலில் பாதுகாப்பு கருதி குதித்த கடற்றொழிலாளரான உடுத்துறையைச் சேர்ந்த தங்கராசா சுமித்தன் என்பவர் படகு வெட்டி காலில் காயமடைந்துள்ளார்.

சிறிலங்காப் படையினர் ஏவிய 8 எறிகணைகள் படகினைச் சுற்றி வீழ்ந்ததாகவும் இதன் போது வேலுப்பிள்ளை அகிலன், தங்கராசா சுமித்தன் ஆகிய இருவரும் குறுகிய இடைவெளியில் தப்பி கரை சேர்ந்ததாக தப்பி வந்தவர்களில் ஒருவரான தங்கராசா சுமித்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் நேற்று தொழிலில் ஈடுபட்ட மீன் பிடிப்படகுகள் மீது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கலங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

உடுத்துறையில் தொழிலுக்காகச் சென்று ஈடுபட்டு வந்த தங்கவேலு குட்டி, புத்தசிகாமணி ஆகிய இருவரும் 5 மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீந்தி படகில் கரை சேர்ந்தனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.