Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 18 பேர் காயம்
Date&Written by: (05.06.2008- Sankiliyan)

வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 படையினர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

வவுனியா மேற்கு பாலமோட்டையில் நேற்று புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான எதிர்த்தாக்குதலில், படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 18 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் இளந்திரையன்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.