Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

படையை விட்டு தப்பியோடிய கோத்தபாயதான் தேசத்துரோகி: ரணில்
Date&Written by: (04.06.2008- Guruparan)

சிறிலங்காப் படையை விட்டு தப்பியோடி அமெரிக்காவில் தஞ்மடைந்த கோத்தபாய ராஜபக்சதான் தேசத்துரோகி என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். களமுனைச் செய்திகளை ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தாது விடின் படையினரது உயிர்களை அரசாங்கம் நாசமாக்கிவிடும். களமுனைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை துரோகிகள் என்று கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

படையில் இருந்து தப்பியோடி அமெரிக்காவுக்குச் சென்ற கோத்தபாய ராஜபக்சதான் தேசத்துரோகி. ஊடகவியலாளர்கள் துரோகிகள் அல்லர். ஈராக் போர் நடந்தபோது அமெரிக்கப் படையினரை அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன.

1983 காலப்பகுதியில் களமுனையின் தன்மைகளை ஊடகவியலாளர்கள்தான் ஆராய்ந்து செய்திகளை வெளியிட்டனர். அதன் அடிப்படையில்தான் படை நடவடிக்கைகள் நடைபெற்றன.

அதேநேரம் களமுனைகளில் நடைபெறும் விடயங்கள் குறித்தும் படை நடவடிக்கையில் எது சரி, எது பிழை என்பது குறித்து கருத்து வெளியிடும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.

யாழ். குடாநாட்டை படையினர் மீட்டபோது களமுனையில் கோத்தபாய ராஜபக்ச இருக்கவில்லை.

கோத்தபாய ராஜபக்சவின் பெயரைப் போட்டு அவரை ஊடகங்களில் விமர்சிக்கக் கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டலையும் மீறி கோத்தபாய ராஜபக்சவை விமர்சித்தால் இரண்டு நாட்களுக்குள் கோத்தபாயவை விமர்சிக்கும் ஊடகவியலாளரை கடத்துகின்றனர்.

இந்த நிலை மாறி ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான பணியை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் என்றார்.

முன்னதாக களமுனைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் துரோகிகளாகவே கருதப்படுவர் என்று இன்றைய நாள் அறிக்கை ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

களமுனைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை மிரட்டும் தொனியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஊடகவியல் துரோகத்தை நிறுத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கும்.

படையினர் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியும் அடிப்படையற்ற விமர்சனங்களின் அடிப்படையிலும் அவர்களை திருடர்களாகவும் முட்டாள்களாவும் காட்ட முனைபவர்களுக்கு "துரோகி" என்பதைத் தவிர பொருத்தமான வேறுவார்த்தை இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.