வவுனியா மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான நெடுங்கேணி, ஒலுமடு, சேனைப்புலவு, பட்டிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை மதியம் 12:00 மணியளவில் நடத்தப்பட்ட இந்த எறிகணை வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் நெடுங்கேணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில்
நெடுங்கேணி 2 ஆம் மைல் கல்லைச் சேர்ந்த சிறி விஸ்வநாதன் (வயது 30)
பட்டைப்பிரிந்தகுளத்தினைச் சேர்ந்த ஆர்.இராசலிங்கம் (வயது 43)
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
|