Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு
Date&Written by: (04.06.2008- Guruparan)

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தெகிவளைப் பகுதியில் தொடருந்துப் பாதையில் இன்று புதன்கிழமை காலை 7:10 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் சிறிய காயமடைந்துள்ளனர்.

பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்தை தெகிவளைப் பகுதியில் இலக்கு வைத்தே இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்ட போதும் தொடருந்து குறிப்பிட்ட பகுதியை தாண்டிய பின்னரே குண்டுவெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குண்டுவெடிப்பினால் தொடருந்து பாதை தண்டவாளம் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த தொடருந்திலும் அந்தப் பகுதியில் தரையில் நின்றவர்களும் என சுமார் 18 பேர் குண்டுவெடிப்பில் சிறு காயமடைந்தனர்.

இவர்கள், களுபோவில மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனை பணிப்பாளர் வி.குமாரசிங்க, காயமடைந்தவர்கள் சிறிய காயங்களுக்கே உள்ளாகியுள்ளனர் என்றும் இவர்கள் தவிர மேலும் 6 பேர் அதிர்ச்சியடைந்து மருத்துமனைக்கு கொண்டுவரப்பட்டனர் என்றும் அவர்கள் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

குண்டுவெடித்த இடத்தில் படையினரும், அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றது.

"பாணந்துறையில் இருந்து தொடருந்து வந்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் பொதி ஒன்றினை தண்டவாளத்திற்கு அருகில் வீசிவிட்டு தொடருந்து அப்பகுதிக்கு வரும் வரை காத்திருந்தார். தொடருந்து அப்பொதிக்கு அருகில் வந்ததும் அந்த இளைஞர் தனது கையில் இருந்த தன்னியக்க கருவி மூலம் குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால் தன்னியக்க கருவியை செயற்படுத்துவதில் அவர் சிக்கல்களை எதிர்கொள்வது போன்று இருந்தது. தொடருந்து சென்ற பின்னரே குண்டு வெடித்தது" என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் தெரிவிக்கையில், "தொடருந்தை இலக்குவைத்து குண்டை எறிந்தவரை அப்பகுதியில் நின்ற பலரும் அவதானித்தனர். குண்டுவெடித்த பின்னர் அப்பகுதியில் நின்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். எனினும் அவர் தற்கொலைக் குண்டுதாரியாக இருக்கலாம் எனக் கருதி அவரைப் பிடிப்பதற்கு அவர்கள் தயங்கினர். இதனையடுத்து அவர் காலி வீதிக்குச் சென்று பேருந்தில் ஏறி தலைமறைவானார்" என்றார்.

அதேநேரம் குண்டுவெடிப்பையடுத்து கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, பாணந்துறை நோக்கிச் செல்லும் தொடருந்து சேவைகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளதுடன், கடற்கரை வீதியும் சில மணிநேரம் போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டிருந்தது.

இன்று மதியத்திற்கு பின்னர் குண்டுவெடிப்பில் பாதிப்படையாத இரண்டாவது தொடருந்து பாதையின் ஊடாக காலி, மாத்தறை, பாணந்துறைக்கான போக்குவரத்துகள் நடைபெறும் என தொடருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.