Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மனித உரிமை சபையில் அறிக்கை சமர்ப்பிக்கின்றது சிறிலங்கா
Date&Written by: (04.06.2008- Delan)

ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும்.

ஜூன் 2 ஆம் நாளில் இருந்து 18 ஆம் நாள் வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு சிறிலங்காவின் மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க, எதிர்வரும் 11 ஆம் நாள் ஜெனீவாவுக்குச் செல்லவுள்ளார்.

இது தொடர்பில் மகிந்த சமரசிங்க தெரிவிக்கையில், "சபையின் கூட்டத்தொடரில் நாம் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம். சிறிலங்கா இந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பான ஐ.நா. மனித உரிமை சபையின் பரிந்துரைகளும் அடங்கியுள்ளன" என்றார்.

மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை அரசு இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும்.

சிறிலங்காவின் அமைச்சர் குழுவில் தூதுவர் தயான் ஜெயதிலக்க, சமாதான செயலக தலைமை அதிகாரி ரஜீவ விஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர் மொகான் பீரீஸ், ஸ்கூப் அமைப்பின் அதிகாரபூர்வ பணிப்பாளர் சிரானி குணதிலக்க அகியோர் அடங்கியுள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.