Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

புலிகளின் எறிகணை வீச்சில் 3 படையினர் பலி
Date&Written by: (03.06.2008- Delan)

தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா கொல்லுக்கோவில் மடுக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே இம் மூவரும் கொல்லப்பட்டனர்.

மன்னாரில் கொட்டுக்குளம் பகுதியில் நிகழ்ந்த மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

வவுனியா சன்னிக்கட்டுக்களத்தில் நேற்று விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மணலாறு ஜனகபுரப் பகுதியில் நேற்று முற்பகல் 11.55 மணிக்கு நிகழ்ந்த தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்தனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.