Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

காத்தான்குடியில் இன்றும் கடையடைப்பு: வன்முறையில் மூவர் காயம்
Date&Written by: (03.06.2008- Niyas)

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் தொடர்ந்து நாளாக மூன்றாவது இன்றும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாள் அங்கு இடம்பெற்ற வன்முறையில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டதனைத் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த கடையடைப்பை முன்னிட்டு அங்கு இயல்பு நிலை செயலிழந்துள்ளது. கடைகள் மற்றும் அரச அலுவலகங்கள் என எவையும் இன்றைய நாள் இயங்கவில்லை.

அங்கு தொடர்ந்தும் ஒரு பதற்ற நிலை நிலவுவதால் இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் காத்தான்குடி ஊடாக தமிழ் மக்கள் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ளக்கூடாது என முஸ்லிம்கள் தெரிவித்துள்ளதுடன் வீதிகளில் ரயர்களையும் போட்டு எரித்து வருகின்றனர்.

இதனால் அங்கு இரு இனங்களுக்கும் இடையில் மோதல் வெடிக்கும் நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் காத்தான்குடி மருத்துவமனை பகுதியில் இரண்டு முஸ்லிம்கள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து ஆரையம்பதி எல்லைக்கிராமம் ஒன்றில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு பலத்த அடி விழுந்துள்ளதாகவும் அவர் தலையில் படுகாயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.