Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐ.தே.கவின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரும் வழக்கு நிராகரிப்பு
Date&Written by: (03.06.2008- Delan)

ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாள் ஏற்பாடு செய்த வாகன நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று மதியம் பெரும் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொழும்பில் வாகன நிறுத்தப் போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான அழைப்புகள் தனியார் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்தப் போராட்டம் சட்டத்திற்கு முரணானது என்றும் மக்களது இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்படுத்தும் செயல் என்றும் காவல்துறை தலைமையகம் நேற்றைய நாள் அறிவித்திருந்ததுடன், இத்தகைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது என்று அறிவித்து இந்த போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி இன்று காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வெலிக்கடை காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதவான், பொதுமக்கள் சுதந்திரமாக தமது கருத்தை தெரிவிக்கும் உரிமை கொண்டிருப்பதால் இத்தகைய போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது என அறிவித்து மேற்படி வழக்கை நிராகரித்துள்ளது.

இதனையடுத்து திட்டமிட்டபடி இன்றுமதியம் பெரும் வாகன நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது. சுமார் 3 நிமிடங்கள் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஒளி, ஒலி எழுப்பப்பட்டன.

வாகன நிறுத்த போராட்டத்தின் பிரதான நிகழ்வு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மேற்படி இரண்டு கட்சிகளினதும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் பேருந்துகள் கொண்டு வரப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தால் கொழும்பில் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்து செயலிழந்தது. எனினும் தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.