Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை..!
Date&Written by: (03.06.2008- Geetha)

சிறீலங்கா படையினரால் திங்கட்கிழமை மதியம் குடாக்கடல், மூன்று கடற்கரையோர நகரங்களில் யாழ் நகராட்சிக்கு உட்பட் பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஊரடங்கானது திங்கட்கிழமை மாலை 5 மணிமுதல் காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் கொம்பாந்துறை, பாசையூர், குருநகர் ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து இப்பகுதியின் இயல்பு வாழ்வு சீர்குலைந்துள்ளதாகவும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது. வழமையாக இப்பிரதேசங்களில் இரவு 10.30 முதல் காலை 4.30 மணிவரையே ஊரடங்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 30 அகவையுடைய பற்றிக் டிவிங்ஸ்ரன் என்பவர் சென்.பற்றிக்ஸ் வீதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் லொயோலா ஹொட்டல் பகுதியில் இடம்பெற்றதாகவும் இவரது உடலம் யாழ் வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தினை தொடர்ந்தே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.