Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பர்மாவை தாக்கிய சுழற்புயலில் நாற்பதுனாயிரம் தமிழ் உறவுகள்
Date&Written by: (01.06.2008- Suganthey)

கடந்த 3ஆம் நாளன்று பர்மாவை சுழற்புயல் தாக்கியதில், இரண்டு
இலட்சம் பொதுமக்கள் பலியானதோடு, மேலும் இலட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர்.

இவ்வாறு சுழற்புயலில் பலியான பொதுமக்களில், நாற்பதுனாயிரம் பேர் தமிழ் உறவுகள் என்றும், மேலும் ஒரு இலட்சம் தமிழ் உறவுகள் தமது இருப்பிடங்களை இழந்து, வீதிகளில் ஏதிலிகளாக அலைந்து திரிவதாகவும், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சுழற்புயலில், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளான ஐராவதி நதிப்புறம், பகோ மாகாணம், ரங்கூனின் புறநகர் ஆகிய இடங்கள் பேரழிவுக்கு உள்ளாகியிருப்பதோடு, முற்றுமுழுதாக தமிழர்கள் வசித்து வந்த, திங்காயூன், தங்கி, டவுன்டகோன் ஆகிய கிராமங்கள், சுழற்புயலில் அடையாளம் இன்றி முற்றாக அழிவடைந்துள்ளன.

தற்பொழுது பர்மாவில் பதினைந்து இலட்சம் தமிழ் மக்கள் வசித்து வரும் நிலையில், சுழற்புயலில் தமது உறவுகளையும், இருப்பிடங்களையும் இழந்த தமிழ் மக்களை, பர்மிய படையாட்சியாளர்கள் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து பர்மாவிற்கு அனுப்பி வைக்கப்படும் சகல விதமான நிவாரண உதவிகளும், பர்மிய மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவதோடு, எவ்விதமான வெளி உதவிகளும் இன்றி, மிகமோசமான அவலத்திற்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு, அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இயற்கை அனர்த்தத்தால் பர்மாவில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

கடந்த இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலும், அதன் பின்னரும்,இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை, பாரத தேசத்திற்கு பர்மிய ஆட்சியாளர்கள் அடித்து விரட்டியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.