Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுங்கள்: கெல உறுமய கோரிக்கை
Date&Written by: (01.06.2008- Delan)

கொண்டாட்டங்களை நிறுத்தி நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுமாறு சிறிலங்காவின் சிங்களப் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய அந்நாட்டு அரசாங்கத்தினைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடத்தின் எஞ்சிய பகுதிகள் முழுவதையும் நாட்டையும் முழுமையான போருக்குள் அரசு ஈடுபடுத்த வேண்டும். எல்லா விழாக்களும் நிறுத்தப்பட வேண்டும்.

வன்னி மீதான படை நடவடிக்கையின் போது படையினருக்கான ஊக்கங்களை அதிகம் வழங்க வேண்டும்.

உள்ளூர் மற்றும் அனைத்துலக எதிரிகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும், அதனை மக்கள் உணர வேண்டும் என்றார்.

அக்கட்சியின் அரசியல் ஆலோசகரும், சுற்றுச் சூழல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாவது:

படையினருக்கான ஆதரவுகளை வழங்குவது எமது கட்சியின் கடமையாகும். வன்னி மீதான படை நடைவடிக்கைக்கு ஆதரவாக நாம் எல்லோரும் ஆதரவுகளை வழங்க வேண்டும். அடுத்த வரும் வடக்கு கைப்பற்றப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

விரைவில் நாகதீப விகாரைக்கு நாம் செல்வோம் என்றார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.