Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அரசுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி திட்டம்
Date&Written by: (01.06.2008- Guruparan)

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பலமான பெரிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அரசுக்கு எதிராக அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் ஐ.தே.க., ஜே.வி.பி., சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்க உட்பட அரசுக்கு எதிரான பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட உள்ளன.

இந்த கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் எனவும், ருக்மன் சேனாநாயக்க ஐ.தே.க.வினை வழி நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார மற்றும் சமூக நலன்களை முன்னிறுத்தி இந்த கூட்டணியில் இணைந்து செயற்பட ஜே.வி.பியும் முன்வந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்ற அரசு தவறியுள்ளதால் அரசுக்கு எதிராக அணிதிரளும் கூட்டணியில் சேர்வதற்கு தமக்குரிய நேரம் வந்துவிட்டதாக ஜே.வி.பி கருதுகின்றது.

மேலும் கூட்டணியில் தலைமைப் பொறுப்பினை ஏற்பதுடன், எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பிலும் விக்கிரமசிங்கவே நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புதிய கூட்டணியின் பொதுச் செயலாளாராக முன்னாள் வானூர்தி நிலைய மற்றும் வானூர்தி சேவைகள் பணிப்பாளர் ரிரான் அலஸ் நியமிக்கப்படவுள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.