Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

இலங்கையின் இனப்பிரச்சினையை இராணுவ ரீதியாகத் தீர்க்கமுடியாது: இணைத்தலைமை நாடுகள் தெரிவிப்பு
Date&Written by: (13.01.2008- Viji)

கடந்த 2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக டோக்கியோ உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாது. சமாதான ரீதியான பேச்சுவார்த்தைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம் என இணைத்தலைமை நாடுகளான நோர்வே ஜப்பான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை இரத்துச்செய்யப்படவிருப்பதால் மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றியுள்ளன. எனவே மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு அவசியமெனவும் இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.

வடக்கில் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குச் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தடைப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமெனவும் இணைத்தலைமை நாடுகள் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.

மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகுவதற்கு கடந்த 2ஆம் திகதி இலங்;கை அரசாங்கம் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் குறித்து நோர்வேத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதியுடன் மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக செயலற்றுப் போகிறது.

மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை இரத்தாகியிருக்கும் நிலையில் வடக்குஇ கிழக்கில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது அலுவலகங்களை மூடிக்கொண்டு வெளியேறிவருகின்றனர்;. மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து வடக்கின் முன்னரங்கப் பகுதிகளில் மோதல்கள் அதிகரித்திருப்பதுடன்இ கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த வருடம் யுத்த ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு நிலையிலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வொன்றைக் காணமுடியாதென இலங்கைக்கு உதவிவழங்கும் டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் ஒன்றிணைந்து கூறியுள்ளன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.