Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

போர் நிறுத்தத்தின் முடிவு அரசியல் தீர்வினை மேலும் சிக்கலாக்கும்: அமெரிக்க தூதுவர்
Date&Written by: (13.01.2008- Roy)

போர் நிறுத்தத்தின் முடிவானது பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காண்பதனையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் மேலும் சிக்கலாக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபட் ஓ பிளேக் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையும் இதனால் மேலும் மோசமடையும். இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவும் யோசனைக்கும் அமெரிக்கா பூரண ஆதரவு அளிக்கின்றது என்று அவர் மேலும் கூறினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் இந்தியாவின் நீதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையகம் நியூயோர்க்கின் மனித உரிமைகளுக்கான சர்வதேச கற்கை இணையம் ஆகியன ஒன்றிணைந்து "மோதல் நிலைமைகளில் மனித உரிமைகள்' என்ற சர்வதேச செயலமர்வை நேற்று கொழும்பு "றேணுகா' ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தன. இந்த மூன்று நாள் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிறந்த இராஜதந்திர உறவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும்இ பொருளாதார அபிவிருத்திக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவியளிக்கும்.

இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இராணுவரீதியான தீர்வின் மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அது வன்முறைகளை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும். போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானமானது அமெரிக்காவை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது. ஏனெனில் இவ்வொப்பந்தமானது சமாதான செயற்பாடுகளுக்கும்இ பேச்சுவார்த்தைக்கும் ஓர் அடிப்படையாகக் காணப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முடிவானது பேச்சுவார்த்தை மூலமாக இணக்கப்பாடு ஏற்படுவதையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் மேலும் சிக்கலாக்கும்.

இந்நிலையானது இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை மேலும் சிக்கலடையச் செய்யும். மோதல்களின் அளவு அதிகரிப்பதற்கேற்ப மனித உரிமை மீறல்களின் அளவும் அதிகரித்து வருகின்றது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.