Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பெரும் தளபதிகளையும், போராளிளையும் இழந்த போதும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம்: கேணல் சூசை
Date&Written by: (13.01.2008- Punitha)

பெரும் தளபதிகளையும், போராளிளையும் இழந்த போதும், பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவாக தமிழீழக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் குறுந்தகடு "சிரிப்பின் சிறகு" வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவு தாங்கிய பாடல் குறுந்தகட்டின் உருவாக்கத்தில் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப் பயணத்தில் நெருக்கடியான காலகட்டத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சுமைகளைச் சுமந்த தளபதியாக சு.ப.தமிழ்ச்செல்வன் இருந்தார்.

1987 ஆம் ஆண்டு தென்மராட்சியில் மேஜர் கேடில்சின் வீரச்சாவுக்குப் பின்னர் போரியல், அரசியல் பொருளாதாரச் சுமைகளைத் தாங்கக்கூடிய தளபதியாக சு.ப.தமிழ்ச்செல்வன் தென்மராட்சியில் பொறுப்பு வகித்தார். தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்து தென்மராட்சியின் தளபதியாக பொறுப்பேற்றார்.

வடமராட்சியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட போர் நடவடிக்கையினால் பெருமளவு மக்கள் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்த போது மக்களுக்கான இருப்பிடங்களை ஒழுங்குபடுத்துவதில் சு.ப.தமிழ்ச்செல்வன் முன்னின்று உழைத்தார்.

கரும்புலி மில்லர் நெல்லியடியில் தாக்குதல் நடத்துவதற்கான ஊர்தியை ஒழுங்கு செய்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

இந்தியப் படையினருக்கு எதிரான மோதல்களின் போது இருப்பிடம், உணவு என்பவை இல்லாது சாவின் விளிம்பில் நின்ற போது இந்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்ட படி தென்மராட்சியில் உறுதியான தளத்தினை பேணுவதில் சு.ப.தமிழ்ச்செல்வன் பெரும்பங்கு வகித்தார்.

சிறுவயதில் அரசியல் பணியினை பொறுப்பேற்றுக்கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், ஊடகங்கள் நெருக்கடியான கருத்துக்களை உருவாக்கிய போதெல்லாம் அக்கருத்துக்களை எல்லாம் தகர்த்தெறிந்து பெரும் வரலாற்றுப் பணிகளை திருப்புமுனைகளாக மேற்கொண்டார்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை பன்னாட்டுச் சமூகத்தின் முன்கொண்டு சென்ற இலட்சிய வீரனாக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

அமைதி முயற்சிக்காலங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு விடுதலைப் போராட்டக் கருத்துக்களை எடுத்துரைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்தவர்.

தேசியத் தலைவர் அவர்களின் கருத்துக்களை மக்களிடமும், மக்களின் கருத்துக்களை தேசியத் தலைவரிடமும் எடுத்துச்செல்வதில் முக்கிய பங்காற்றினார்.

இழப்புக்களின்றி ஒரு விடுதலைப் போராட்ம் வெற்றியைப் பெற்றுவிட முடியாது. எமது விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதைகளை மீட்டுப்பார்போம் ஆயின், இழப்புக்களில் இருந்துதான் எமது விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டிருக்கின்றது.

ஏனெனில 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது இயக்கம் 30 பேருக்கு குறைவாக இருந்த போது ஒரு குறித்த நாட்களுக்கிடையில் செல்லக்கிளி, சீலன், சங்கர் முன்னணிப் போராளி ஆனந் ஆகியோரை இழந்தது.

எனினும் எமது விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெற்றது.

இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதிக்கு குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இழந்தோம்.

பெரும் தளபதிகளையும், போராளிளையும் இழந்த போதும் பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம்.

தேசியத்தலைவர் அவர்கள் ஊட்டிய வீரம், தளபதிகள் வளர்த்தெடுத்த போராளிகள், காட்டிய அர்ப்பணிப்புக்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வெற்றிகளை ஈட்டிக்கொள்ள வழிசெய்தது.

தலைவர் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி எமது இலட்சிய குறிக்கோளை வென்றெடுக்க அனைவரும் உழைப்போம் என்றார் கேணல் சூசை.

இந்நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனி இடம் உள்ளது.

சு.ப.தமிழ்ச்செல்வன் அரசியல் பணி மட்டும் அல்ல, இயக்கத்தின் முக்கிய பணிகளைச் சுமந்து சென்றவர். தொடக்க காலத்தில் இயக்கத்தில் நான் இனைந்து கொண்ட போது தமிழ்நாட்டின் அரசியல் பணி ஏற்றேன்.

அக்கால கட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் நெருக்கடி நிலமை இருந்தது. என்னிடம் அடிக்கடி வரும் சு.ப.தமிழ்செல்வன் எனது பணிக்கு உதவியாக பல்வேறு ஆலேசனைகளை எனக்கு கூறுவார்.

சு.ப.தமிழ்செல்வனிடம் எல்லோரின் இதயங்களைப் புரிந்து கொள்ளக்குடிய ஆற்றல் இருந்தது. நாம் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் சிறிலங்கா அரசின் பெய்யான முகத்தினை பன்னாட்டுச் சமூகத்தின் முன் வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்.

மனித உரிமை விடயங்களை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத பன்னாட்டுச் சமுகம் இன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் பெரும் பங்காற்றியவர் சு.ப.தமிழ்செல்வன்.

சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களின் கனவை நிறைவேற்ற விடுதலையை நாம் விரைவில் வென்றெடுக்க வேண்டும் என்றார் அவர்.

கிளிநொச்சியில் உள்ள பண்பாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவாக தமிழீழக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் குறுந்தகடு "சிரிப்பின் சிறகு" வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரையின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரினை கேணல் சங்கரின் துணைவியார் குகா ஏற்றினார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு துணைவியார் இசைச்செல்வி சுடர்ரேற்றி, மலர்மாலை அணிவித்தார்.

லெப். கேணல் அலெக்சின் திருவுருப்படத்திற்து துணைவியார் யாழ்மதி,

மேஜர் நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு தந்தையார்,

மேஜர் செல்வத்தின் திருவுருவப்படத்திற்கு தந்தையார்,

மேஜர் மிகுதனின் திருவுருவப்படத்திற்கு உடன்பிறப்பு,

லெப். மாவைக்குமரனின் திருவருவப்படத்திற்கு தாயார்,

லெப். ஆட்சிவேலுவின் திருவப்படத்திற்கு மாமனார்

ஆகியோர் சுடரேற்றி, மலர்மாலைகளை அணிவித்தனர்.

நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் சு.ரவி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

"சிரிப்பின் சிறகு" பாடல் குறுந்தகட்டினை வடபோர் முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் வெளியிட, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் இசைச்செல்வி பெற்றுக்கொண்டார்.

பாடல் குறுந்தகடு உருவாக்கத்தில் பங்களித்த கலைஞர்களை தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் றேகா, புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பன், நீதி, நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் சி.கரிகாலன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ரவி ஆகியோர் மதிப்பளித்தனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.