Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

காத்தான்குடியில் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கிச்சூடு: 3 முஸ்லிம்கள் படுகாயம்
Date&Written by: (13.01.2008- Niyas)

மட்டக்களப்பில் உள்ளூராட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் காத்தான்குடி கர்பாலாவில் உள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக பிள்ளையான் குழுவினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு 7:55 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கர்பாலா பள்ளிவாசலின் பிரதம இமாம் பரீட் மௌலவி மற்றும் பைசல், அலாசுதீன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இசாத் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலின் முன்பாக உரையாடிக்கொண்டிருந்தபோதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈருளியில் வந்த பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவரே இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மூவரும் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பள்ளிவாசல் இமாமின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. காத்தான்குடி காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிள்ளையான் குழுவினரே இத்தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்ததுடன் பிள்ளையான் குழுவினருக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.