Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிறிலங்கா உயர்மட்டத்தினருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவிப்பு
Date&Written by: (13.01.2008- Guruparan)

சிறிலங்காவில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு மிக முக்கியமான தேவைகள் தவிர்த்து ஏனைய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அரச தலைவர், பிரதமர், அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி முதலாம் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொல்லப்பட்டமை அதற்கு 8 நாட்களுக்குப் பின்னர் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம்.தசநாயக்க படுகொலை செய்யப்பட்டமை ஆகியவற்றையடுத்து அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

போர் ரீதியாக தோல்வியைத் தழுவியிருக்கும் விடுதலைப் புலிகள், தமது தோல்வியினால் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை மறைப்பதற்காக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை தொடுக்கும் திட்டத்தைக் கொண்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருப்பதும் முக்கிய பிரமுகர்களின் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற கடந்த 9, 10, 11 ஆகிய நாட்களில் நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு என சில பாதைகளை மூடுவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரையும் பாதுகாப்புக் காரணங்களை கருத்திற் கொண்டு ஒத்திவைக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்விற்கு அமைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் இரட்னசிறி விக்கிரமநாயக்க, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கேகலிய ரம்புக்வெல்ல, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருக்கும் அரசியல்வாதிகள் பட்டியலில் முன்னணியில் உள்ளனர். இவர்கள் தவிர மேலும் பல அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலுக்கு இலக்கானோர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.