Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

எதிர்வரும் 5 ஆம் நாளுக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது?
Date&Written by: (13.01.2008- Guruparan)

அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற புதிய கூட்டத்தொடர் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்தின் நாடாளுமன்றக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மீண்டும் பெப்ரவரி மாதம் 5 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதன்போது அவசரகாலச் சட்டத்தை ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மார்ச் மாத இறுதியிலோ ஏப்ரல் மாதத்திலோ ஆரம்பிப்பது சம்பந்தமாக அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய நாள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தினை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைவதுடன் நாடாளுமன்ற குழுக்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலில் அடங்கியுள்ள அனைத்து விடயங்களும் இரத்தாகும்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.