Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

நிலையியற் குழு உறுப்பினர் நியமனங்களில் தலையிட அதிகாரம் இல்லை: மகிந்த அறிவிப்பு
Date&Written by: (13.01.2008- Guruparan)

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தற்போது செயற்படும் எந்தவொரு நிலையியற் குழுவிற்கும் அரச திணைக்கள தலைவர்களை நியமிக்கவோ அல்லது மாற்றவோ சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பு அமைச்சரவை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எந்த நிலையின் கீழும் திணைக்களத் தலைவர்களை நியமித்தல் அல்லது மாற்றுதல் தொடர்பான அதிகாரம் இருப்பது அமைச்சரவைக்கும் சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கும் மாத்திரமே என அரச தலைவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச கணக்கியல் சபையினால் இறைவரித் திணைக்கள ஆணையாளரை நீக்குமாறு செய்யப்பட்டிருந்த பரிந்துரை காரணமாகவே அரச தலைவரினால் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தலைவர், நிதியமைச்சர் என்ற வகையில் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை அறிக்கையில் ஏதேனுமொரு அமைச்சின் செயலாளர் அல்லது சிரேஸ்ட அரச அதிகாரியை நாடாளுமன்றத்தின் செயற்குழு ஒன்று அழைத்து விடயங்களை ஆராயும் போது அவர்களின் கௌரவத்திற்கு இழுக்கு நேராது பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல அனைத்து நாடாளுமன்ற குழுவும் அரச சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.