Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சந்தேகத்தின் பேரில் மலையக இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது
Date&Written by: (13.01.2008- Guruparan)

ஜா-எலவில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுவெடிப்பு தொடர்பாக பசறையைச் சேர்ந்த மலையக தமிழ் இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேநேரம் வேறு இரண்டு மலையகத் தமிழர்கள் பேலியகொடை காவல்துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு "வெளியில் எங்கும் செல்லக்கூடாது" என எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கொழும்பு மாவட்ட மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஸ்ணனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

ஜா-எல நிர்மலா வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.பாலகிருஸ்ணன் அவரது உதவியாளரான கே.பாலகிருஸ்ணன் ஆகியோரே பேலியகொடை காவல்துறையினரால் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது சுமையுந்தில் காட்போட் ஏற்றிக் கொண்டிருந்த பசறையைச் சேர்ந்த குமரசாமி யோகராஜா என்பவரும், சுமையுந்து சாரதி, உதவியாளர் மூவரும் தற்போது ஜா-எல காவல் நிலையத்தில் சுமையுந்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குண்டு வெடிப்பில் காயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான தேவதாஸ் சார்ல்ஸ், யோகன் ஆகியோர் பேலியகொடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக 50-க்கும் அதிகமானவர்களை ஜா-எல காவல்துறையினரும், இரகசிய காவல்துறையினரும் விசாரித்துள்ளதாக ஜா-எல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.