Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்கா நீதிமன்ற உத்தரவை மீறி கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள்
Date&Written by: (13.01.2008- Guruparan)

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் பயணிகள் சோதனையிடப்பட்டு வருவதுடன் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.

வீதிகளில் சோதனைச் சாவடிகளை புதிதாக அமைத்து பயணிகள் சோதனையிடப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவையடுத்து வீதிகளில் இடம்பெற்று வந்த சோதனைகள் நிறுத்தப்பட்டன. எனினும் மீண்டும் நேற்று முதல் இத்தகைய சோதனைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

படையினர், காவல்துறையினரின் மேற்பார்வையில் 10,000-க்கும் அதிகமான ஊர்காவல் படையினரைக் கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. வான்படை மற்றும் கடற்படையினரும் சில இடங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கொழும்பு-நீர்கொழும்பு வீதியில் களனி பாலத்திலும், பேஸ்லைன் வீதியிலும், காலி வீதியில் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களிலும் நாடாளுமன்ற வீதி உள்ளிட்ட மேலும் பல இடங்களிலுமே இத்தகைய சோதனை இடம்பெற்றது.

இந்த சோதனைக்காக வீதிகளில் பாதுகாப்புத் தடைகள் போடப்பட்டிருந்தன. பயணிகள் மட்டுமின்றி வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதேவேளை தொடருந்து நிலையம் மற்றும் தனியார் பேருந்து தரிப்பு நிலையங்களிலம் நேற்று வழமைக்கு மாறாக படையினர் குவிக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

அரச உயர்மட்டத்தின் உத்தரவிலேயே இந்த சோதனைகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீதிகளில் இருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்படாமல் இருந்திருந்தால் அமைச்சர் தசநாயக்க படுகொலை செய்ய வாய்ப்பேற்பட்டிருக்காது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருக்கிறார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.