Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

குடாநாட்டில் இருந்து கண்காணிப்புக்குழு இன்றுடன் வெளியேறுகிறது
Date&Written by: (13.01.2008- Geetha)

யாழ். குடாநாட்டில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடைசி அனைத்துலக கண்காணிப்புப் பிரதிநிதியும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறுவதுடன் அதன் யாழ். அலுவலகமும் மூடப்படுகின்றது.

நல்லூர் கோவில் வீதியில் இயங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலக கட்டடம் தனியார் ஒருவருக்கு சொந்தமானது. அக்கட்டடம் மீண்டும் உரிமையாளரிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டு விட்டது.

இதனிடையே போர் நிறுத்த கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிலிருந்த பிக்கப் வாகனங்களை கப்பல் மூலம் கொழும்புக்கு எடுத்துச் செல்ல இறுதியில் முடிவாகியுள்ளது.

முன்னதாக இந்த வாகனங்களை கண்ணிவெடியகற்றல் பிரிவு மற்றும் டெனிஷ் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பு என்பனவற்றிடம் கையளிக்க முடிவாகியிருந்தது. இந்த இரு அமைப்புக்களும் யாழில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றன.

ஆயினும் வாகனங்களுக்கான வரி உள்ளிட்ட சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இறுதியில் கொழும்புக்கு வாகனங்களை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏற்றி வரும் கப்பல்களில், காங்கேசன்துறை துறைமுகத்தில் இந்த வாகனங்கள் ஏற்றி கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.

இதனிடையே கண்காணிப்புக் குழுவின் யாழ். அலுவலகத்தில் பணியாற்றிய உள்ளூர் பணியாளர்கள் 8 மாத சம்பளக் கொடுப்பனவுகளுடன் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் அலுவலக பயன்பாட்டுப் பொருட்களும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.