Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அனைத்துலகம் எதிர்பார்க்கும் மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் சொல்லப்போவது என்ன?
Date&Written by: (27.11.2007- Sankiliyan)

அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களைப் பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று செவ்வாய்க்கிழமை மாலை தாயக நேரம் 5:34 மணிக்கு இடம்பெறப்போகும் இந்த உரையில் தலைவர் பிரபாகரன் என்ன சொல்லப் போகின்றார் என்பதை தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அனைத்துலக சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

தலைவர் பிரபாகரனின் மாவீர் நாள் உரையானது, விடுதலைப் புலிகளின் அடுத்தகட்டப் போராட்டம் எந்தத் திசையில் செல்லப்போகின்றது என்பதை வெளிப்படுத்திக்காட்டுவதாக இருப்பதே வழமை. அத்துடன் கடந்த ஒரு வருட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கான விளக்கங்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதாகவும் அவரது உரை அமைந்திருக்கும்.

இந்த வகையில் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள ஒரு பின்னணியிலேயே இன்றைய அவரது உரை அமைவதால், இச்சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறான கருத்துக்களை அவர் முன்வைக்கப்போகின்றார் என்பதைத்தான் உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஆண்டுக்கான விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல் எவ்வாறானதாக அமையும் என்பதற்கான சமிக்ஞைகளை அவர் காட்டுவார்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிப்பாகவும், தமிழர் தாயகப் பகுதி எங்கும் பொதுவாகவும் இனப்படுகொலைகளும், மனித உரிமை மீறல் சம்பவங்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றது. இராணுவத் தீர்வை நோக்கிய நடவடிக்கையாக பெருந்தொகையான ஆயுதங்களை உலக நாடுகளிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் வாங்கிக் குவிக்கின்றது. போரும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் முற்று முழுதாக இனவாதப் போக்கிலேயே தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இவை தொடர்பாகவும் பெயரளவுக்கு நடைமுறையிலிருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது உரையில் கருத்துக்களை வெளிப்படுத்துவார்.

இதனைவிட அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை பிரபாகரனின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகலாம் எனத் தெரிகின்றது. அனைத்துலக சமூகத்தின் ஒப்புதலுடனேயே போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதனைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாத அனைத்துலக சமூகம், அரசாங்கத்தின் இனவாத மற்றும் யுத்தவாதப் போக்கைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பது அவருடைய கண்டனத்துக்குள்ளாகலாம். அத்துடன் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அனைத்துலக சமூகம் விடுதலைப் புலிகளின் மீதுதான் அழுத்தங்களைப் பிரயோகிப்பதையிட்டும் அவர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தலாம்.

விடுதலைப் புலிகளின் சார்பில் சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொண்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வான் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில் இடம்பெறும் இந்த மாவீரர் நாள் உரையில், அது தொடர்பாகவும் பிரபாகரன் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கலாம்.

தேசியத் தலைவரின் இந்த உரை புலிகளின் குரல் மூலமாகவும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மூலமாகவும் நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படும். மாலை 5:34 மணிக்கு ஆரம்பமாகும் அவரது உரை சுமார் அரை மணி நேரத்துக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேசியத் தலைவரின் உரையை உடனடியாகவே ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.