Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தரையிறங்கிய விளையாட்டு உலங்குவானூர்தியால் கொழும்பில் பரபரப்பு
Date&Written by: (26.11.2007- Nitharsan)

கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த உலங்குவானூர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றின் மீது தரையிறங்கியதாக அந்த வீட்டில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.

"சிறிய பொருள் ஒன்று கூரையில் விழும் சத்தம் கேட்டது. அங்கே சென்று பார்த்தபோது இந்த சிறிய உலங்குவானூர்தி கிடந்தது" என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வெல்லம்பிட்டி காவல் நிலையத்திற்கு வீட்டிலிருந்தோர் இன்று காலை தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த உலங்குவானூர்தியை பரிசோதனையின் பின்னர் இன்று மதியம் எடுத்துச் சென்றனர்.

சுமார் ஒன்றரை அடி நீளமான அந்த உலங்குவானூர்தி சிறுமி ஒருவரின் விளையாட்டுப் பொருள் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த உலங்குவானூர்தியால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு இதனையடுத்தே தணிந்தது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.