Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

டிசம்பர் 13 அல்லது 14 இல் மகிந்த அரசாங்கம் கவிழும்: ரணில்
Date&Written by: (25.11.2007- Delan)

எதிர்வரும் டிசம்பர் 13 அல்லது 14 ஆம் நாள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கவிழும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 21 ஆம் நாள் மாலை ஐ.தே.கவின் அரசியல் விவகாரக்குழு, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கேம்பிறிட்ஜ் ரெரசில் உள்ள அதன் அலுவலகத்தில் கூடியது.

எதிர்வரும் டிவம்பர் 14 ஆம் நாள் நடைபெறவுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான மூன்றாம் கட்ட வாசிப்பின் போதான வாக்கெடுப்பு தொடர்பாக இக்கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டம் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி விபரம்:

இக்குழுவில் கலந்து கொண்டவர்களை வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பாக வெளிப்படையான அறிக்கைகள் எதனையும் வெளியிட வேண்டாம் என்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

நாம் அரசை கவிழ்ப்போம், அது டிசம்பர் 13 அல்லது 14 இல் நிகழலாம். ஆனால் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பை இலக்கு வைத்து பிற கட்சிகளுடன் போட்டி போட வேண்டாம். அது பல கட்சிகளுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தோன்றியுள்ள அச்சுறுத்தல்களை நீங்கள் பார்க்கலாம். எனவே அவர்களை பற்றியேனும் பேச வேண்டாம்.

தமது வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக அவர்கள் நிறைய பேச வேண்டியுள்ளது. அவர்களை அதற்கு அனுமதிப்போம். நாம் கவனமாக செயலாற்ற வேண்டிய நேரம் இது. எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ரணில் மேலும் தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்கவும் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐ.தே.கவின் கட்சி அமைப்பாளர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் நாள் சிறீ கொத்தாவில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன் போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.