Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ரணிலை ஆட்சி அமைக்க அழைப்பதா?: மகிந்தவுக்கு சு.க.வில் எதிர்ப்பு
Date&Written by: (25.11.2007- Nitharsan)

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்த மகிந்த ராஜபக்சவுக்கு அவரது சுதந்திரக் கட்சியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஆளும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அண்ணமியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் யாரையேனும் ஒருவரைக் கொண்டு ஆட்சி அமைக்கலாமே தவிர ரணிலை மட்டும் அழைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அரசாங்கம் பக்கம் தாவிய ஐ.தே.க. அதிருப்திக் குழுவைச் சேர்ந்த மகிந்த விஜசேகரவும் முன்னர் ரணிலை ஆட்சி அமைக்க அழைத்திருந்தார். பின்னர் அந்த வேண்டுகோளை விலக்கிக் கொண்டார்.

தற்போதைய சிறிலங்காவின் அரசியல் நிலைமைகளால் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமிருப்பதாக கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.