Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் 3 பேர் உள்ளிட்ட 4 பேர் பலி- 7 பேர் காயம்
Date&Written by: (25.11.2007- Punitha)

குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தர்மபுரம் 8 ஆம் யூனிட் பகுதி பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கீபிர் வானூர்திகள் இக்குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் மூவர் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்ணலிங்கம் (வயது 55), இவரின் மனைவி சரஸ்வதி (வயது 50), இவர்களின் மகளாகிய அமிர்நந்தினி (வயது 26) மற்றும் அயலவரும், மாணவியுமாகிய முருகையா சுபாசினி (வயது 15) ஆகியோர் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவீச்சில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமடைந்துள்ளன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.