Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அவசியம்: லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தல்
Date&Written by: (22.11.2007- Vimal)

சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பி.பி.சி. ஊடக நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல்:

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையமானது அந்நாட்டின் அரச தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுவது. அதன் செயற்பாட்டு முறையானது அண்மைக்காலமாக குறைந்துள்ளது. மேலும் சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணையத்திற்கான அனைத்துலக அங்கீகாரம் என்பதும் பரிசீலனைக்குரியது.

ஆகையால்தான் இலங்கையில் வலுவான மனித உரிமைகள் கண்காணிப்பகமாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் வலுவாக இயங்க இயலாது. எனவே இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைப்பது குறித்து நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

சிறிலங்கா அரசாங்கமானது எமது பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

சிறிலங்காவில் மனித உரிமைகளை ஆய்வு செய்வதற்காக அழுத்தம் கொடுக்க எழுப்பப்படும் குரல்களில் பாரிய தொய்வு உள்ளது என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.