Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மன்னாரில் 22,332 பொதுமக்கள் இடம்பெயர்வு
Date&Written by: (21.11.2007- Punitha)

சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதல்களால் மன்னாரில் 22,332 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழர் தாயகத்தின் வடமேற்கு மாவட்டத்தில் மன்னார் அமைந்துள்ளது. அங்கு தமிழ் பேசும் மக்களே வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தையும் மற்றையோர் முஸ்லிம் மற்றும் இந்து மதங்களையும் பின்பற்றுகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களினால் மன்னாரில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளிலிருந்து மட்டும் 22 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மன்னார் அரச அதிபர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 5,938 குடும்பங்களைச் சேர்ந்த 22,332 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, அடம்பன், ஆண்டாங்குளம், பெரியமடு மற்றும் பள்ளமடுப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இம்மக்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் எல்லையோர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்திலும் சிறிலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலினால் 3,071 குடும்பங்களைச் சேர்ந்த 10,302 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களில் 90 விழுக்காட்டினர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். அந்த மக்கள் இடம்பெயரும் போது தங்கள் வாழ்வாதார விவசாய நிலங்களையும் கைவிட்டு விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்குள்ளாகின்றனர். அந்த மக்களினது வாழ்வாதார இழப்பு மட்டுமல்ல இது. மன்னார் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் மீதான பாரிய தாக்குதலுமாகும்.

மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை நீர்த்தேக்கமானது இந்தத் தீவின் 2 ஆவது மிகப் பெரிய நீர்த்தேக்கமாகும். இதனை சிங்களப் படைகள் ஆக்கிரமித்து 7 ஆயிரம் ஏக்கரிலான விவசாய செயற்பாடுகளுக்குரிய நீரை அளிக்க மறுத்து வருகின்றனர். இதனால் மக்களின் பொருளாதார நிலை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

மாவிலாறு மதகுகளைத் திறப்பதாகக் கூறிக் கொண்டு திருகோணமலையில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு திருகோணமலை தமிழ் மக்களை வெளியேற்றியது. மதகுகளைத் திறக்கச் சென்றபோது கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்தபோதும் கூட இராணுவத் தாக்குதல்களை சிறிலங்கா தரப்பு நிறுத்தவில்லை.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்கான எரிபொருட்கள் தற்போது தடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலும் அனைத்துலகப் பார்வையாளர்கள் தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றனர்.

கடுமையான் எரிபொருள் பற்றாக்குறையால் பொதுமக்கள் மற்றும் சிறார்களின் கல்விச் செயற்பாடுகள் கடும் பாதிப்படைந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.