Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல: சோமவன்ச
Date&Written by: (21.11.2007- Ranan)

மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றில் வாக்களித்தமையானது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல என்று ஜே.வி.பியி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

மகிந்த அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக நாம் வாக்களித்தமையானது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல.

எமது கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள்தான் தெரிவித்தன. ஆனால் எமது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக மகிந்த அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அதேபோல் எமக்கும் அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியதும் உண்மையில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் சோமவன்ச அமரசிங்க.

ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறியதாவது:

வரவு-செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாக்கெடுப்பில் 16 வாக்குகளால் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அரசாங்கத்தரப்பு அதிகமாக உற்சாகம் கொள்ளக்கூடாது அரசாங்கத்தரப்பில் நிறைய ஓட்டைகள் உள்ளன. எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் நாள் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.