Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிந்தவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்தது- தாவிய ரட்ணதிலக்கவுக்கு பதவி
Date&Written by: (21.11.2007- Guruparan)

சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மகிந்த ரட்ணதிலக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்தில்லாத புடவைக் ககைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி இன்று வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் மகிந்த ரட்ணதிலக்க அமைச்சுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்றமை குறித்து மகிந்த ரட்ணதிலக்க தெரிவிக்கையில்,

நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதற்கு பிரதியுபகாரமாக அரச தலைவர் எனக்கு இந்த அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளார். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்லதொரு சந்தர்பத்ததையே அவர் எனக்கு தந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை நான் முறையாகப் பயன்படுத்துவேன். அத்துடன் எனக்கு ஆதரவளித்த மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன் என்றார்.

எதிர்க்கட்சியிலிருக்கும் பலரை வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு டிசம்பர் 14 ஆம் நாள் நிகழ்வதற்கு முன்னர் மேலும் பலரை அரசாங்கத்துடன் இணைக்கும் முயற்சியாகவும் எதிரணியினருக்கு அமைச்சுப்பதவி ஆசை காட்டவுமே மகிந்த ரட்ணதிலக்கவிற்கு அமைசசுப் பதவி வழங்கப்பட்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகிந்த ரட்ணதிலக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பதன் மூலம் சிறிலங்காவின் அமைச்சரவை எண்ணிக்கை மொத்தம் 108 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.