Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த கொழும்பு பங்குச் சந்தை
Date&Written by: (21.11.2007- Delan)

சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றியைப் பெற்ற போதும் அந்நாட்டின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் அவரது கூட்டணியினரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து, அந்த வெற்றியை வெடிகொளுத்தி கொண்டாடிய போதும், கொழும்பு பங்குச்சந்தையின் முதலீட்டாளர்கள் பெரும் வீழ்ச்சிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கொழும்பு பங்குச்சந்தை 6.5 பில்லியன் ரூபாய்களால் வீழ்ச்சி கண்டுள்ளது.

அதாவது சந்தையின் முதலீடுகள் 842.8 பில்லியன் ரூபாய்களில் இருந்து 836.3 பில்லியன் ரூபாய்களாக கடந்த திங்கட்கிழமை வீழ்ச்சி அடைந்தது.

தனியார்துறையினரும், முதலீட்டாளர்களும் 2008 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக முதலில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் நாள் நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக அவர்கள் ஏமாற்றங்களைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவதற்கு தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி திரட்டமுடியாது போனதும் ஏமாற்றமானதே என்றும் மற்றுமொரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் நாள் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி இன்றில் இருந்து திரட்டிவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி சார்பான முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.