Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மனிதாபிமானப் பணியாளர்களுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பு இல்லை: ஐ.நா.
Date&Written by: (21.11.2007- Devi)

சிறிலங்காவில் மனிதாபிமானப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு பாதுகாப்பும் அவர்கள் பிரச்சனைக்குரிய இடங்களை அணுகுவதும்தான் அடிப்படையானது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த இரண்டுமே சிறிலங்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இல்லாமல் போய்விட்டது.

கடந்த 14 மாதங்களில் 24 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு மட்டும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு மட்டும் 3 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நபம்பர் 18 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் ஹலோ ட்ரஸ்ட் என்கிற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூதூரில் அக்சன் பார்ம் அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளில் தொய்வு உள்ளது.

இனமோதலினால் இலங்கையில் இந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சம் பேர் உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.