Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

"சண்டே லீடர்" அச்சகம் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினால் தீவைப்பு
Date&Written by: (21.11.2007- Guruparan)

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

"சண்டே லீடர் மற்றும் மோர்ணிங் லீடர் ஆகிய நாளேடுகள் அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தி வந்த பல தகவல்கள் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே அமைந்திருந்தது

குறிப்பாக அரசாங்கத் தரப்புக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கருணாவை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் என்பன அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடமான நிலைமையை தோற்றுவித்திருந்தது.

இந்தப் பின்னணியிலேயே இன்று அதிகாலை 3:30 மணியளவில் வார ஏட்டின் அச்சகத்துக்குச் சென்ற ஆயுதக்குழு அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அச்சகத்தைத் தீவைத்துக் கொழுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அச்சகத்திலிருந்த வார ஏடுகள், பத்திரிகைத் தாள்கள் மற்றும் இயந்திர சாதனங்கள் என்பன எரிந்துகொண்டிருப்பதாக இன்று காலை கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.