Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐ.தே.க.வுடன் அமெரிக்கத் தூதுவர் நெருக்கம்: அரச தரப்பு கடும் சீற்றம்
Date&Written by: (21.11.2007- Suganthey)

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான வாசிப்பின் போது சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்கவுடன் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை 4:00 மணியளவில் தேனீர் அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபாபதியின் மருமகன் கடத்தப்பட்டது மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டது தொடர்பாக பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடமும், றொபேர்ட் ஓ பிளேக்கிடமும் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்புகொண்ட றொபேர்ட் ஓ பிளேக் இந்த முறைப்பாடு தொடர்பாக தெரிவித்துள்ளதுடன், நிலமையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டிருந்தார். ஆனால் இதனை கோத்தபாயா ராஜபக்ச கருத்தில் எடுக்காது அமெரிக்கத் தூதுவரை அவமதித்திருக்கின்றார்.

அதேசமயம், அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், கோத்தபாய ராஜபக்சவுக்கான தொலைபேசி அழைப்பை அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தே மேற்கொண்டதாகவும் மகிந்த ராஜபக்சவிற்கும் கூறப்பட்டது.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம மற்றும் மேலும் ஒரு அமைச்சரையும் அழைத்து நாட்டின் உள்விவகார அரசியலில் தலையிடாது இருக்குமாறு றொபேர்ட் ஓ பிளேக்கிடம் கூறுமாறு கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, றொபேர்ட் ஓ பிளேக்கை அவசரமாக அழைத்த போதும் சுமூகமாகவே உரையாடியுள்ளார். தற்போதைய நாட்டு நிலமைகள் தொடர்பாக மிக நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுக்கள் மிகவும் சுமூகமாக நடைபெற்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்க அரசாங்கம் முடக்கியுள்ள நிலையில் இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அரசாங்கம் எண்ணியுள்ளதாகவே பின்னர் தெரியவந்துள்ளது.

எனினும் கடத்தப்பட்டவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் றொபேர்ட் ஓ பிளேக், ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் சிலருடன் இரவு உணவை அருந்திக்கொண்டு இருந்தார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினர் விடுவிக்கப்பட்டது தொடர்பான தகவலை அறிந்த ரணில் விக்கிரமசிங்க, றொபேர்ட் ஒ பிளேக்கை தொடர்பு கொண்டு அதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்கத் துதுவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தேனீர் விருந்தில் கலந்து கொண்டது சாதாரணமான ஒரு நிகழ்வு என்றும், அதேசமயம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டது தற்செயலானது என்றும் ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை அரசாங்கம் தவறாக புரிந்து கொண்டுள்ளதுடன் அது தொடர்பாக தேவையற்ற கவலைகளை கொண்டுள்ளதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

ஆனால் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த ஞயிற்றுக்கிழமை இரவை மிக நீண்டநேரம் செலவிட்டதாகவும், றொபேர்ட் ஓ பிளேக்கின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததாகவும் அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.