Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மடுவைக் கைப்பற்ற சிறிலங்காப் படையினர் கடும் முயற்சி: "த பொட்டம்லைன்" வார ஏடு
Date&Written by: (21.11.2007- Sivamalar)

மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு தேவாலயப்பகுதியை சிறுகச் சிறுக முன்நகர்ந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் முயற்சித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை வெளிவந்த அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள் வருமாறு:

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவுக்கு அமைய படையினர் சிறப்புப் படை நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா-மன்னார் எல்லைப் பகுதிகளில் இந்த சிறப்புப் படையினரே நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகவும் சிறந்த பயிற்சி பெற்ற இந்த படையினரையும், அதிகாரிகளையும் பயன்படுத்துவதன் மூலம் மோதல்களில் படையினரின் இழப்புக்களை குறைவாகப்பேண முடியும். போரைப் பொறுத்தவரை அது உள்நாட்டுப் போர் என்றாலும் அல்லது மரபு ரீதியிலான போர் என்றாலும் இறப்புக்களும், இழப்புக்களும் உலகின் எந்தப் பகுதியிலும் தவிர்க்க முடியாதவை.

வரவு-செலவுத்திட்ட நாளான நவம்பர் 19 ஆம் நாளும் படையினர், வவுனியா கிழக்குப்பகுதி மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா கிழக்குப் பகுதியில் உள்ள நாவல்குளம் பகுதியில் 2 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினரின் சிறப்பு அணியினரும், விளாத்திக்குளம் பகுதியில் 8 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினரின் சிறப்பு அணியினரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிக்குளம் பகுதியில் 9 ஆவது கெமுனுவோச் படைப் பிரிவைச் சேர்ந்த படையினர் விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்தார். இதேசமயம் மன்னாரில் உள்ள பாலம்பிட்டியில் சிறப்பு அதிரடிப்படையினர் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டிருந்தனர். இந்த மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை காலை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் உதயா பெரேரா சகிதம் வவுனியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு வன்னிப் பகுதி இராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் வன்னிப் பகுதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, 56 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் ரம்புக்கோத்த, 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ், முதலாவது அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்ரா டி சில்வா, மன்னார்ப் பிராந்தி கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்ன குணதிலக்க, மணலாறு பிராந்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் மோகன் ஜெயவர்த்தன, சிறப்புப் படையணி கட்டளைத் தளபதி கேணல் நிர்மல் தர்மரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக எல்லா இராணுவ அதிகாரிகளும் தளபதிக்கு விளக்கமளித்தனர். அதன் பின்னர் களமுனைத் தளபதிகளுக்கு சிறப்பான கட்டளைகளை வழங்கிவிட்டு சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்றார்.

மடுப் பகுதியை கைப்பற்றும் தமது நடவடிக்கைகள் மெதுவாக ஆனால் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதிக்கான விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியாக கேணல் ஜெயம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கொழும்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாக படையினரின் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு எழுந்தமானமாக வீதித்தடைகள் போடப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.