Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

இனச்சிக்கலைத் தீர்க்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்: கனடியப் பிரதமரிடம் ஈழவேந்தன் வேண்டுகோள்
Date&Written by: (20.11.2007- Niruba)

இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்குமாறு கனடியப் பிரதமர் ரீவன் ஹார்ப்பரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடாவில் தற்போது தங்கியிருக்கும் ஈழவேந்தன் கனடியப் பிரதமரை நேரில் சந்தித்த போதே இக்கோரிக்கையை முன்வைத்தார்.

ரொறன்ரோவில் உள்ள றோயல் யோர்க் ஹோட்டலில் கனடியப் பிரதமருக்கு கனடியன் கழகத்தினால் அளிக்கப்பட்ட மதிய விருந்தின்போது இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 1,000-க்கும் அதிகமான தொழில் அதிபர்கள் மத்தியில் கனடிய அரசாங்கத்தின் அரியணைப் பேச்சில் குறிப்பிட்டிருந்த சமூக, பொருளாதாரக் கொள்கை பற்றி ஹார்ப்பர் விளக்கம் அளித்தார்.

பிரதமர் ஹார்ப்பருக்கு ஈழவேந்தனை அறிமுகப்படுத்தி வைத்தபோது இருவரும் கைகுலுக்கியதோடு ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டனர்.

அப்போது "கனடிய அரசாங்கம் ஈழத்தமிழரை காப்பாற்ற முன்வரவேண்டும். ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கும் பொருளாதார நெருக்குவாரத்துக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறிலங்காவில் இருந்து தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே ஒரு இரத்தக்களரி ஏற்பட முன்னர் கனடிய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தமிழர்களை இன அழிப்பில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும்" என்று ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர் பேசுகையில், "கனடிய அரசாங்கத்தின் யாப்பை மாதிரியாகக் கொண்டு விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும் பேசிக்கொள்ளலாம் என்று இருதரப்பையும் கனடா கேட்க வேண்டும். ஈழத் தமிழர்கள், கனடிய யாப்பு- இலங்கை போன்ற பல்லின, மொழி, சமய, கலாசார மக்கள் வாழும் நாட்டின் சிக்கலுக்கு ஒரு நடைமுறைத் தீர்வாக அமையும் என்று நம்புகின்றார்கள். வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதற்கு கனடிய யாப்பு உதவும் என்பதால் அதனைக் கவனமாக ஆராயத் தமிழர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

தமிழர்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கை, சிந்தனை ஆகியவற்றை மறுவாசிப்புச் செய்யவும் மறுவடிவம் கொடுக்கவும் கனடிய அரசாங்கம் அரசியல் மற்றும் தார்மீக அழுத்தங்களைக் கொடுக்க முன்வரவேண்டும். சிறிலங்கா அரசாங்கம் அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில் கனடா தமிழ்மக்கள் அமைதியோடும், பாதுகாப்போடும் தன்மானத்தோடும் வாழும் இறையான்மையை ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளது" என்று ஈழவேந்தன் எடுத்துரைத்தார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.