Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஹக்கீமுக்கும், ஆறுமுகம் தொண்டமானுக்கும் "எலும்புத்துண்டு" கொடுத்த மகிந்த அரசு: ஐ.தே.க.
Date&Written by: (20.11.2007- Guruparan)

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் எலும்புத்துண்டை கொடுத்து தம்முடனேயே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் சாடியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி அரசியல் கட்சிகளை அச்சுறுத்தியிருக்கின்றனர். மகிந்த ராஜபக்ச கூட இந்த அச்சுறுத்தல்களை விடுத்திருக்கிறார். அவரைவிட அவரது ஆதரவு அமைச்சர்களும் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்திருக்கின்றனர்.

தற்போது பாகிஸ்தானில் நடைபெறுவது போன்ற நிலையை இங்கும் உருவாக்கியுள்ளனர். மகிந்த ரட்னதிலக்கவை தடுப்புக்காவலில் வைத்திருப்பது போன்றே வைத்திருக்கின்றனர்.

வரவு-செலவுத்திட்டம் மீதான அடுத்த வாக்கெடுப்பு டிசம்பரில் நடைபெறும்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பலம் வெளிப்படும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இன்று அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளன. அதற்காக அவர்களுக்கு எலும்புத் துண்டுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்தும் அவர்கள் அரசாங்கத்துடன் இருப்பர் என்று கருதிவிட முடியாது. அரசாங்கத்துக்கு எதிராக அவர்கள் திரும்புவர். இது அடுத்த வாக்கெடுப்பில் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்றார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.