Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தேசிய அரசுக்கு மகிந்த முயற்சி
Date&Written by: (20.11.2007- Guruparan)

வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமது அரசாங்கம் தப்பிப்பிழைத்த போதும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும், எதிர்க்கட்சியுடனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தவுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மனைவியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரணில் விக்கிரமசிங்கவை மகிந்த ராஜபக்ச சந்தித்திருந்தார். அன்று இருவரும் தேசிய அரசாங்கம் குறித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்னாள் முப்படைத்தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போதும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து மகிந்த ராஜபக்ச ஆராய்ந்திருந்தார்.

வரவு-செலவுத்திட்டத்தில் அரசாங்கம் வெற்றி பெற்றாலும் சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் சிறிலங்கா அரசாங்கம் தங்கியிருப்பதை மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்றும் அதனால்தான் தேசிய அரசு ஒன்றை அமைக்க அவர் விரும்புவதாகவும் மகிந்த ராஜபக்ச அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் வரவு-செலவுத்திட்டம் மீதான அடுத்தகட்ட வாக்கெடுப்பு டிசம்பரில் முடிவடைந்த பின்னரே இது குறித்து எதிர்க்கட்சியுடன் ஆராய்வதற்கு மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.