Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கொழும்பு துறைமுகம் அருகே 37 கடற்றொழிலாளர்கள் கைது
Date&Written by: (20.11.2007- Nitharsan)

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கடற்றொழில் செய்துகொண்டிருந்த 37 பேரை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்ததற்காக கடற்படையினர் கைது செய்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தசாநாயக்க தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் நீந்திக்கொண்டிருந்த 10 பேரும் படகுகளில் இருந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ஒட்சிசன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடம் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலேல் கடற்றொழிலாளர்களை மீது விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மீனவர் சங்கப்பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.