Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மகிந்தவால் தீர்வை முன்வைக்க முடியாது: இரா.சம்பந்தன்
Date&Written by: (20.11.2007- Guruparan)

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை முன்வைக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் ஆற்றிய உரை:

அமெரிக்காவில் உரையாற்றும்போது இனப்பிரச்சினை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்று மகிந்த ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் இந்தியாவில் உரையாற்றும்போது விரைவில் இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்று கூறுகின்றார்.

வடக்கு-கிழக்கில் குறைந்தளவான மக்களே இருப்பதாகக் காட்டுவதற்கு மகிந்த ராஜபக்ச முனைகின்றார். 81 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் அதனை தமிழ்த்தலைமை ஏற்கத்தயாராக உள்ளது. ஆனால் மகிந்த ராஜபக்சவின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்குமிடத்து அவரால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற நிலை காணப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கமானது பொதுக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் பேரழிவு நிகழ்ந்திருக்காது. பாதுகாப்புச் செலவுகள் இப்படி கட்டுமீறி அதிகரித்திருக்காது.

தற்போது சிறிலங்காவும் இராணுவ மயமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை ஆட்சியைத் தக்க வைப்பதற்காக யாருடனும் கூட்டுச்சேரலாம் என்ற நிலையிலேயே இருக்கிறது. அதற்காக என்ன வேண்டுமானாலும் இந்த அரசாங்கம் செய்து கொள்ளும் என்றார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.