Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கனகசபையின் மருமகனைக் கடத்த ஏவிவிட்டது மகிந்த அரசுதான்: இரா.சம்பந்தன் சாடல்
Date&Written by: (19.11.2007- Guruparan)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காக கனகசபையின் மருமகனைக் கடத்த துணை இராணுவக் குழுவினரை மகிந்த ராஜபக்ச அரசாங்கமே ஏவிட்டது என்று த.தே.கூ.. நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை காலை தொடங்கியதும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இரா.சம்பந்தன் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து பேசியதாவது:

மட்டக்களப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், கனகசபை, தங்கேஸ்வரி ஆகியோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டு அங்கு துணை இராணுவக் குழுவினர் புகுந்து அவர்களை மிரட்டுவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அது மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மருமகன் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவரைக் கடத்தி வைத்துக்கொண்டு வரவு-செலவுத்திட்டத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி மிரட்டுகின்றனர்.

இது குறித்து மகிந்த ராஜபக்சவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயற்சித்தேன். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து நேற்று மாலை மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து முறையிட்டேன்.

இது குறித்து அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் கூறினார். அதன் பின்னர் அவரது செயலாளர் லலித் வீரதுங்கவும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசாங்கம்தான் துணை இராணுவக் குழுவினரை ஏவிவிட்டு அச்சுறுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவே இத்தகைய மிரட்டல்களை விடுக்கின்றனர்.

இராணுவமும், காவல்துறையினரும், துணை இராணுவக் குழுவினருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர். எனவே அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மருமகனை விடுவிக்க முடியும். அத்துடன் எமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத்திட்ட வாக்களிப்பிற்காக பாதுகாப்புடன் அழைத்து வரப்பட வேண்டும் என்றார்.

இரா.சம்பந்தனின் இந்த வேண்டுகோளை ஆமோதித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பில் உள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அத்துடன் கடத்தப்பட்ட கனகசபையின் மருமகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயுதம் தாங்கியவர்களின் இத்தகைய மிரட்டல்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க முடியாது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை பாதுகாக்க சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சு இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்க வேண்டும். மட்டக்களப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களை கூட்டி வரவேண்டியதும் பாதுகாப்பு அமைச்சே என்றார் ரணில்.

அப்போது சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாதுகாப்பு அமைச்சை ரணில் விமர்சிப்பது தவறு என்று ஆளும் தரப்பில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். ரணிலை அமைச்சர் மேர்வின் சில்வா தகாத வார்த்தையால் பேசினார். திட்டினார்.

அப்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எழுந்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

கருணா என்பவரை கொழும்புக்கு கூட்டி வந்தது யார்? இந்த ரணில்தான். அலிசாகிர் மௌலானா என்பவரை பயன்படுத்தி கருணாவை ரணில் கொழும்புக்கு கூட்டி வந்தார். அதனை அவர் மறந்து விட்டாரா? அதே ரணில்தான் இன்று கருணாவிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

ரணிலுக்கு இன்னொரு பெருமை உண்டு. அதாவது வர்த்தகர்களை பயன்படுத்தி எமது தரப்பு ஆட்களை விலைக்கு வாங்க முயற்சித்த வியாபாரி என்றார்.

அந்தவேளை நாடாளுமன்றில் எழுந்து பேச ஆரம்பித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இது உயிருடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதனை வைத்து வாதம் செய்வது அழகல்ல. அதனால்தான் அவரை விடுவிக்கும்படி கோரினோம் என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, மாமனுக்கும் மருமகனுக்கும் பாதுகாப்பு வழங்க நாங்கள் என்ன...? இது அரசாங்கம். நாங்கள் எங்களது சகோதரிக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்கிறோமா என்றார்.

இதையடுத்து நாடாளுமன்றில் பெரும் குழப்பம் நிலவியது. ஆளும் தரப்பும் எதிரணியும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

எனினும் கொழும்பில் தங்கியிருந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், கனகசபை, தங்கேஸ்வரி, ஆகியோர் சபைக்கு இறுதி நேரம் வரையிலும் சமூகமளிக்கவில்லை.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.