Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க தீவிர ஆலோசனை
Date&Written by: (19.11.2007- Sivamalar)

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மீதான துன்புறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட சிறிலங்காவுக்கு வந்த மனித உரிமை கண்காணிப்பக அதிகாரிகள் மீது விசா மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்க சிறிலங்கா அரசாங்கம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலா விசாவின் மூலமாக சிறிலங்காவுக்கு வந்த அக்குழுவினர் ஊடகவியலாளர் மாநாடு நடத்தவும் இத்தகையதான அறிக்கை வெளியிடவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

நியூயோர்க்கைத் தலைமையிடமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினர் தங்களது சிறிலங்காப் பயணத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால் ரோகித போகல்லாகம அதற்கு மறுத்துவிட்டார்.

சிறிலங்கா இராணுவம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றினது செயற்பாடுகளை அனைத்துலக அளவில் அம்பலப்படுத்தி வருகிற அரச சார்பற்ற அமைப்புக்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முதன்மைப் பங்கு வகிப்பதால் சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய கடும்போக்கை கடைபிடிப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னர் இதே அமைப்பைச் சேர்ந்த சாரு ஹொக் சிறிலங்காவுக்கு வந்தபோது மகிந்தவை நேரில் சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் சிறிலங்காவின் மனித உரிமை முறைகேடுகள் தொடர்பிலான அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அப்போதும் அவர் சுற்றுலா விசாவில் வந்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.