Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தொடரும் எறிகணை வீச்சினால் 22,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு
Date&Written by: (19.11.2007- Punitha)

மன்னாரில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொள்ளும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களையடுத்து 22,000-க்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்ளின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது.

வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஐ.நா. முகவர் அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மன்னாரின் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளான மாந்தை மேற்கு, அடம்பன், ஆண்டான்குளம், பெரியமடு, பள்ளமடுப் பகுதிகளை நோக்கி படையினர் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இப்பிரதேச மக்கள் மன்னார், கிளிநொச்சி எல்லைப் பிரதேசங்களுக்கும் கிளிநொச்சிக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாவட்ட செயலக தகவல்களின்படி 5,938 குடும்பங்களைச் சேர்ந்த 22,332 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெவிக்கப்படுகின்றது.

அதேவேளை மோதல்கள் காரணமாக வவுனியாவின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து சுமார் 3,071 குடும்பங்களைச் சேர்ந்த 10,302 இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்குமிடம், உணவு, குடிநீர் வசதிகளையும், நாளாந்த பாவனைப் பொருட்களையும் அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்குவதில் ஈடுபட்டு வருகின்றன.

யு.என்.எச்.சி.ஆர், ஒக்ஸ்பாம், உலக உணவுத் திட்டம், வேர்ல்ட் விசன், சேவா நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.