Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அரசிற்கே ஆதரவு: உதிரிக்கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
Date&Written by: (19.11.2007- Delan)

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அரசில் அங்கம் வகிக்கும் மூன்று சிறிய அரசியல் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்திலேயே மகிந்த ராஜபக்சவிடம் இக்கட்சிகள் கட்சிகள் தமது உறுதிமொழிகளை வழங்கியுள்ளன.

எமது கட்சி கொள்கை உள்ள கட்சி, எனவே தவறான முடிவுகளை இரகசியமாக எடுக்காது. நாம் ஏதாவது முடிவை எடுக்க எண்ணினால் அதனை அரச தலைவருக்கு முன்னதாகவே தெரிவித்து விடுவோம் என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ராவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எமது கட்சி வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மூத்த உறுப்பினரான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மேலும் பல சிறிய கட்சிகளான ஜாதிக கெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு ஆகியனவும் அரசிற்கான தமது ஆதரவை நேற்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளன.

எமது கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றது எனவே நாம் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவே நாம் வாக்களிப்போம். வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக நாம் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. இன்று நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதை எல்லோரும் பார்க்கலாம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.