Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவுக்கு இந்தியா பாரிய அளவில் உதவிகளை வழங்குகிறது: "த நேசன்"
Date&Written by: (18.11.2007- Devi)

சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பாரிய அளவில் உதவிகளை அளித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது.

அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனது கடும் போக்கு தொடர்பான அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு குறித்து மகிந்த ராஜபக்ச அரசு தற்போது கவலைப்படவில்லை. போர் நிறுத்தம் என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது என அரசு எண்ணுகின்றது. இரு தரப்பும் அதனை மதிக்கவில்லை.

அமெரிக்காவின் தற்போதைய நிலை குறித்து மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி கொண்டுள்ளளார். அண்மையில் கடற்படையினருக்கு அமெரிக்கா கண்காணிப்புப் படகுகளை வழங்கியிருந்தது. அதன் உச்சகட்டமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் அமெரிக்கா முடக்கியுள்ளது. இதில் அரசு பரம திருப்தி அடைந்துள்ளது. அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை கொண்டுள்ள போதும் அதனை வெளிக்கொண்டு வர அது விரும்பவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே, இந்தியா புலனாய்வுத் தகவல்களையும், ஆயுத உதவிகளையும் சிறிலங்காவுக்கு வழங்காது போயின் கடற்படையினர் வெற்றிகளை அடைந்திருக்க முடியாது. சிறிலங்கா வான் படையினருக்கும் இந்தியா பெரும் உதவிகளை அண்மையில் வழங்கியுள்ளது. வான் படையினரின் கொள்வனவுகளுக்காக இந்தியா 100 மில்லியன் டொலர்களை குறைந்த வட்டிக்கு வழங்கியுள்ளது.

அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் மகிந்த ராஜபக்சவின் அரசை ஒரு தோல்வியடைந்த அரசாகவே இந்தியா கருதுகின்றது. இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடான தீர்வே சாத்தியமானது என இந்தியா நம்புகின்றது. மகிந்த ராஜபக்சவுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்த்த இந்தியத் தலைவர்கள், அவரின் பயணத்தின் போதும் உயர்ந்த வரவேற்பையும் வழங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததில் இருந்து 2005, 2006, 2007 ஆண்டுகளின் காலப்பகுதியில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக மூன்று முறை பயணங்களை மேற்கொண்டிருந்தார். அவரது சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தியாவுக்கு பலமுறை சென்றனர்.

பொருளாதார ரீதியில் இரு நாடுகளுக்கும் நல்ல உறவுகள் உள்ளன ஆனால் அரசியல் ரீதியில் தான் பிணக்குகள் உள்ளன. எனினும் இதில் மிகவும் சாதகமற்ற விளைவும் உண்டு. மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான ஆதரவுகள் பெருகி வருகின்றன. மகிந்த ராஜபக்ச அரசு மீதான எதிர்ப்பைப் பல அரசியல் கட்சிகள் நேரடியாக தெரிவித்து வருகின்றன. இது அரசாங்கத்திற்கு அனுகூலமானது அல்ல என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.